தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் காரணத்தால் சாலையின் அளவு குறுகி போக்குவரத்து நெரிசல் !
SHYAM NEWS
19.7.2022
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் - மழைநீர் வடிகால் பணிகளால் சாலையின் அகலம் குறுகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம், கான்கிரீட் சாலைகள், மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய் என சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. வடிகால் அமைப்பதற்காக பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், பல்வேறு மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி சிதம்பர நகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி வீடுகளை ஒட்டியவாறு அமைக்காமல் சுமார் 6 அடி தூரம் தள்ளி அமைக்கப்படுகிறது. அப்பகுதிகளில் விஐபிக்கள் வீடுகள் அமைந்துள்ளதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இப்பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் சாலையின் அளவு குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மாநகராட்சி நிர்வாகம் ஏழை, வசதிபடைத்தவர் என பாரபட்சம் பார்க்காமல் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றிவிட்டு கால்வாய் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.