ஷ்யாம் நியூஸ்
28.07.2022
ஸ்டெர்லைட் ஆலையை அடைத்தபின்பு மாதந்தோறும் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி !
கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் பொதுமக்கள் 13 நபர் காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டனர் .இதனை தொடர்ந்து மக்கள் போராட்டத்திற்கான காரணம் ஸ்டெர்லைட்ஆலையால் மாசு ஏற்படுவதாக தெரியவந்ததால் ஆலையை தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்டது .அதன்பின்னர் ஸ்டெர்லைட்நிர்வாகம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் ,இதுவரை ஆலையை திறப்பதற்க்கான எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை .இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலையை விற்பனை செய்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட்நிர்வாகம் அறிவித்திருந்தது .
ஆலை மூடப்பட்டதிலிருந்து பழங்காலத்தை கொன்று மாதந்தோறும் மழைபெய்து வருகிறது .இதனால் தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நீர்வளம் பெருகியுள்ளது .இதனைத்தொடர்ந்து விவசாயம் செழித்து வருகிறது .ஸ்டெர்லைட்ஆலையை மூடியதால்தான் மாதம் மும்மாரி மழை பொழிகிறது என்று தூத்துக்குடி சுற்றுவட்டார விவசாயிகள் தெரிவித்தனர் .