ஷ்யாம் நீயூஸ்
27.07.2022
அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி காங் நூதன போராட்டம் நடத்தினர்.
இன்று 3வது நாளாக சோனியாகாந்தியை விசாரனைக்கு அழைத்த அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மதியம் 12மணி முதல் தொடர்ந்து வாயில் கருப்பு துணி கட்டி மத்திய மோடி அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. மத்திய மோடி அரசு பாராளுமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் தடுப்பது,மக்கள் மன்றத்திலும் போராட்டம் நடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறை மூலம் தாக்குதல் நடத்தி பேச விடாமல் தடுப்பது போன்ற செயலில் தொடர்ந்து மத்திய மோடி அரசு செயல்படுவதை குறிக்கும் வகையில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடந்தது.இந்த அறப்போராட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா ,சேகர் ,எஸ். பி.ராஜன்,ஐ. என்.டி.யு.சி.தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்,மாவட்ட துணை தலைவர் மார்க்கஸ்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,கதிர்வேல்,இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நடேஷ்குமார் ,இளைஞர் காங்கிரஸ் செயலாளர் மாடக்கண்,ஆகியோர் கலந்து கொண்டனர்.