ஷ்யாம் நியூஸ்
27.07.2022
மகள் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை .தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கருப்பசாமி (48). இவரது மகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டாராம். மகள் இறந்ததால் கருப்பசாமி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.