காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பசுமைப் புரட்சி காமராஜ் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஷ்யாம் நீயூஸ்
24.07.2022
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பசுமைப் புரட்சி காமராஜ் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பசுமை புரட்சி காமராஜர் இயக்கம் துவக்க விழாவும்,தெற்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த தின விழா பிரையண்ட் நகர் 10வது தெரு கிழக்கு பகுதியில் அமைப்பு சாரா தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ். பி.ராஜன் தலைமையில் நடைபெற்றது. அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு குக்கர்,சேலை,பள்ளி குழந்தைகளுக்கு சீருடை வழங்கினார்.
இன்று மாலை நடந்த இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஜசன்சில்வா,மாநகர் துணை தலைவர் A.D.பிரபாகரன்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,சின்னகாளை,வார்டு தலைவர்கள் முனியசாமி,கோபி,சரவணன்,தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக எலிசபெத் ராஜன் நன்றி தெரிவித்தார்.