தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மணல் புதர் செடிகள் அகற்றும் பணியை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.
ஷ்யாம் நீயூஸ்
20.07.2022
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மணல் புதர் செடிகள் அகற்றும் பணியை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 60வது வார்டுகளிலும் உள்ள தேவையற்ற ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி விரிவான சாலைகளையும் பொதுமக்களையும் நடைபாதைகளாகவும் சீர் செய்து வருகின்றன. பல சாலைகளில் தேவையற்ற மணல்களும் சில பகுதிகளில் முட்புதர் உள்ளிட்ட செடிகள் வளர்ந்த நிலையில் காணப்பட்டன. இதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு பொதுநல அமைப்புகளும் சில பகுதிகளில் வியாபாரிகள் சங்கத்தினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து மாநகராட்சியால் 15வது நிதிக்குழு மாணியம் திட்டத்தின் கீழ் புதிதாக வாங்கப்பட்ட ஜேசிபி வாகனம் மூலம் தெற்கு கடற்கரை சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்ட மணல் குவியல்கள் மற்றும் செடிகளை அகற்றும் பணியை சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ரெக்ஸின், மாநகர திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், பிரதிநிதி பிரபாகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும். என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். அதனடிப்படையில் 60 வார்டு பகுதிகளிலும் மழைகாலத்திற்கு முன்பு தண்ணீர் தேங்காத வகையில் கால்வாய் புதிதாக சில அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதே போல் தார்சாலையும் பல பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது பல சாலைகளில் தேங்கியுள்ள மணல்களால் பாதிப்பு ஏற்படுவதாகவும் சாலையும் சுருங்கியுள்ளதாகவும் அதை முழுமையாக அப்புறப்படுத்தி விரிவான சாலையை ஏற்படுத்தி தரவேண்டும். என்று கோரிக்கை வரப்பெற்றதையடுத்து கலெக்டர் பங்காள முதல் தெற்கு கடற்கரை சாலை 3வது மைல் பாலம் முதல் பழைய துறைமுகம் வரை முதற்கட்டமாக சாலையின் இருபுறங்களில் இருக்கும் தேவையற்ற மணல்கள் முட்புதர்கள் செடிகள் அப்புறப்படுத்தி விரிவான சாலையை பொதுமக்கள் வசதிக்கேற்ப செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் மற்ற பகுதிகளிலும் இதுபோன்று முழுமையாக மக்கள் நலன் கருதி அந்தபணிகளை செய்துகொடுக்க உள்ளோம். பாதசாரிகளுக்கு நடந்து செல்வதற்கென்று அமைக்கபப்பட்டுள்ள அந்த வழிதடத்தில் நடந்துசெல்ல வேண்டும். பிரதானசாலைகள் அனைத்தும் போக்குவரத்து இடையூறு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி கொடுப்பதுதான் எங்களுடயை இலக்கு என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.