ஷ்யாம் நீயூஸ்
05.07.2022
இடையற்காடு சம்படி பெத்தனாட்சியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் இடையற்காடு அருகிலுள்ள சம்படி பெத்தனாட்சியம்மன் கோவில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. வருடந்தோறும் வருஷாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்துவது வழக்கம் இந்த ஆண்டு அங்குள்ள பெத்தனாட்சியம்மன் நாகராஜன் பேச்சியம்மாள் அரியநாச்சி வாழவெட்டி அய்யனார் மாடசாமி முனீஸ்வரன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருஷாபிஷேகத்தையொட்டி இரண்டு நாட்களாக யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்று வருஷாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது கோபுரத்தின் மேல் கருடன் வட்டமிட்டதை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். வருஷாபிஷேக விழாவில் மதுரை சந்திகிரி மறாமங்கலம் நாச்சியாபுரம் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி மந்திரமூர்த்தி ராஜா முருகேசன் மதுரை முருகேசன் பாஸ்கர் அம்மாபொன்னு மற்றும் சந்திரகிரி பொதுமக்கள் செய்திருந்தனர்.