ஷ்யாம் நியூஸ்
26.07.2022
தூத்துக்குடியில் திடீரென்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த காற்று வீசி வந்தது. அவ்வப்போது லேசான மேகமூட்டமும் காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்தது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் மாலையில் மேகங்கள் திரண்டு திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரத்தில் நின்று விட்டது. பின்னர் இரவு 8.45 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. அப்போது பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.