மனிதர்களை கடத்தும் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு தூத்துக்குடி எம்பி கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டனர்
ஷ்யாம் நீயூஸ்
30.07.2022
மனிதர்களை கடத்தும் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு தூத்துக்குடி எம்பி கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டனர்
மனிதக் கடத்தலுக்கு எதிரான உலக தினமான இன்று (30/07/2022), தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் சென்னை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்ற மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமுக நலன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் D.ரத்னா, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி விஜயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.