ஷ்யாம் நீயூஸ்
28.07.2022
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் புதுக்கோட்டை அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியான கோரம்பள்ளம், திம்மராஜபுரம், மாப்பிள்ளையூரணி, முடிவைதானேந்தல், மேல கூட்டுடன்காடு, அள்ளிக்குளம், முள்ளக்காடு, உள்ளிட்ட பகுதிகளில் புதிய பணிகள் மேற்கொள்வதற்கும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிதனுஷ்பாலன், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பூபாண்டியபுரத்தில் மழைநீர் தேங்காத வகையில் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. அதை விரைவாக முடித்து ராஜபாளையம் பகுதியில் பணிகளை தொடங்க வேண்டும். அதே போல் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி;க்கு குப்பை அள்ளும் வாகனம் கூடுதலாக பத்து ஓதுக்க வேண்டும். என்று கோரி;க்கை வைத்தார். தலைவர் வசுமதி 10 வாகனத்திற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்று கூறி மற்ற இரு பணிகளும் விரைவாக நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஓன்றிய குழு துணைத்தலைவர் ஆஸ்கர், தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி முகாம் ஒன்றியத்திற்குட்;பட்ட பல பகுதிகளில் நடைபெறுகிறது. ஆனால் கவுன்சிலர்களுக்கு முறையாக தெரிவிப்பதில்லை. எங்களுக்கும் அது பற்றிய தகவல்கள் வராத காரணத்தால் மக்களுக்கு கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் அதை முறையாக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். ஊராட்சி ஒன்றிய அதிகாரி மாசானம் முறையாக தெரிவிக்கப்படும் என்றார்.
கூட்டத்தி;ல் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்குமார், ஆனந்தி, முத்துமாலை, நர்மதா, தொம்மை சேவியர், ஜெயகணபதி, செல்வபாரதி, சுதர்சனன், முத்துலட்சுமி, உள்பட அரசுத்துறை சார்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.