ஷ்யாம் நீயூஸ்
31.07.2022
தூத்துக்குடி மாநகராட்சியில் 29ல் தீர்மானம் 30ல் ஆய்வு மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்கும் முழுமையாக பணியாற்றி வருகிறாhர். தினமும் பொதுமக்களை சந்தித்து தனது அலுவலகத்திள்ள உதவியாளர் மூலம் வரும் மனுக்களுக்கு குறைகளை தீர்க்கும் வகையில் அதிகாரிகளுடன் இனைந்து பணியாற்றி வரும் மேயர் கவனத்திற்கு முத்தையாபுரம் ரவுண்டா பகுதியில் உப்பாத்து ஓடைக்கு அருகில் இரண்டரை ஏக்கர் மாநகராட்சியிடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தகவல் கிடைக்க பெற்றதையடுத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு அந்த இடம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த இடத்தில் பல மாவட்டங்களிலிருந்து பாதசாரிகளாக திருச்செந்தூருக்கு நடந்து வரும் பக்தர்களுக்கும் வாகனங்களில் வருபவர்களுக்கும் ஓய்வு எடுக்கும் வகையில் அந்த இடத்தில் கழிப்பிட வசதி பூங்கா ஓய்வு அறை என அனைத்து கட்டமைப்பு வசதிகளும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க செய்து கொடுக்கப்படும் என்று மேயர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு திமுக அதிமுக காங்கிரஸ் மதிமுக கம்யூனிஸ்ட் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 30ம் தேதி அந்த இடத்தை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தெற்கு மண்டல உதவி ஆணையர் ராமசந்திரன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர் ஜோஸ்பர், உடனிருந்தனர்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி பணியாற்றி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடம் மட்டுமின்றி கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமை மாநகராட்;சி நிர்வாகத்திற்கு உண்டு என்ற அடிப்படையில் சித்திரை மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற பிரதிபெற்ற சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் திருக்கோவில் தேரோட்டத்தை யொட்டி அப்பகுதியில் தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு சாலை மணல்கள் அப்புறப்படுத்தி இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் தேர் வந்து செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள பிரதி பெற்ற பணிமயமாதா திருவிழா நடைபெறும் நிலையில் அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆன்மீன அமைப்பு சார்ந்த பல வெளிமாவட்டத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு ஒய்வு அறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வரப்பெற்றிருந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததை கண்டறிந்து தற்போது அதனை மீட்டுள்ளோம். அந்த இடத்தில் சகல வசதிகளும் செய்து கொடுத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவலர்களும் நியமிக்கப்படவுள்ளன. எம்மதமும் எங்களுக்கு சம்மதம் மக்கள் பணிதான் முக்கியம் என்ற கடமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம். என்று கூறினார்.. மேயரின் அதிரடி நடவடிக்கைக்கு பக்தர்கள் பொதுமக்கள் பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.