ஷ்யாம் நியூஸ்
22.07.2022
தூத்துக்குடி அருகே டீக்கடையின் பூட்டை உடைத்த பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முத்துக்குமார் (44), இவர் அங்குள்ள மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டரின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.11 ஆயிரம் பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.