தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 16 ஆயிரம் 800 டன் நிவாரண பொருட்களை கனிமொழி எம்.பி கொடியசைத்து கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
ஷ்யாம் நீயூஸ்
23.07.2022
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 16 ஆயிரம் 800 டன் நிவாரண பொருட்களை கனிமொழி எம்.பி கொடியசைத்து கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி பேசுகையில்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரனமாக அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் மத்திய அரசிடம் சுமார் 133-கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான அனுமதியினை வாங்கி இன்று 3-தவணையாக 174-கோடி ரூபாய்-க்கு நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார்.
எங்கு தமிழர்கள் எங்கு மனிதர்கள் அவதிபட்டாலும் தமிழ் இனம் ஓடோடிபோய் கைகொடுக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை நிரூபிக்கும் ஒரு மனிதனாக பெரியார் சொன்ன மனித நேயத்தை கடைபிடிக்கக்கூடிய ஆட்சியாக தமிழக முதல்வர் வழி நடத்தி சென்று கொண்டிருக்கின்றார் எனவே இலங்கையில் அழகான தீவில் வசிக்கக்கூடிய மக்கள் மீண்டும் அழகான ஆட்சி பெற்று பொருளாதாரம் உயர்ந்து மகிழ்ச்சியாக வாழ நாம் அனுப்பும் ஒரு சிறு நிவாரண பொருட்களாக இவை அமையட்டும் என்று நெகிழ்ச்சியுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி தெரிவித்தார்.