ஷ்யாம் நியூஸ்
29.07.2022
சாத்தான்குளம் அருகே ஊராட்சித் துணைத் தலைவர் வீட்டில் இரு ஆடுகள் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் தடிக்காரன் மகன் சுந்தரராஜ் (37). ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் துணைத் தலைவரான இவர். ஆடு, மாடுகள் வளர்த்து மராமரித்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி வீட்டில் கட்டி போட்டியிருந்த இரு ஆடுகளை காணவில்லை.
இந்த ஆட்டின் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும். ஆடுகள் மாயமானதால் அதன் குட்டிகள் மட்டும் பரிதவிப்பில் நின்றுள்ளது. இதனையடுத்து சுந்தரராஜ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.