ஷ்யாம் நீயூஸ்
12.07.2022
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு
25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 58 குக்கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. வளர்ந்து வரும் ஊராட்சியில் பெரிய ஊராட்சி ஆகும்.
இந்த பகுதியில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் மின் தடை அடிக்கடி ஏற்படுவதாகவும், கனரக வாகனங்கள் சில பகுதிகளில் செல்ல முடியாத நிலையில் மின் வயர்கள் இடையூறாகவும் இருந்து வந்தது. இதற்கு தீர்வு காண வேண்டுமென்று பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள், வியாரிகள், வாகன உரிமையாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக அரசிற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பொறுப்பில் உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை மின் வாரிய அதிகாரிகளிடம் ஊராட்சி மன்றம் சார்பில் செய்ய வேண்டிய பணிகளை எடுத்து கூறியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று, ஊராட்சி மன்ற பகுதிக்குட்பட்ட ராஜபாளையம், தாளமுத்துநகர் மெயின்ரோடு, சுனாமிகாலனி ஆகிய பகுதிகளில் தாழ்வாக உள்ள பழைய மின் கம்பங்களை அகற்றி உயரமான புதிய மின் கம்பங்கள் கிரேன் மூலம் 12 இடங்களில் புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின் தடை இல்லாத நிலை உருவாகும். தாழ்வான பகுதிகள் அனைத்தும் உயர்வான மின்வயர்கள் மூலம் அமைக்கப்படுவதால், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் அமையும்.
மின்கம்பம் நடும் பணியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் பார்வையிட்டார். நகர்புற மின்வாரிய செயற்பொறியாளர் பி.ராம்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், திமுக கிளை செயலாளர் மாரியப்பன், சமூக ஆர்வலர் தொம்மை உட்பட மின்வாரிய ஊழியர்கள் உடனிருந்தனர்.
25 வருடமாக அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறாமல் இருந்ததை, திமுக ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் நிறைவேற்றிக் கொடுத்துள்ள அவருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.