போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !
ஷ்யாம் நீயூஸ்
28.04.2025
போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளது
இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள்
ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள்
மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் நகரத்தார் குறிச்சி என காட்டப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் மணியாச்சி கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற ஒரு நிலத்தின் பட்டா எண் 258 புல எண் 49 / 3 இந்த நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு முத்தார என்பவரின் வாரிசு என காட்டி விண்ணப்பம் செய்துள்ளார்கள்
வாரிசு சான்று விண்ணப்ப மனுவை மணியாச்சி கிராம நிர்வாக அலுவலர் மேற்படி வாரிசு சான்று விண்ணப்பத்தை இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் போலியானது என அறிய வந்ததை அடுத்து அந்த விண்ணப்பத்தை நிராகரிப்பு செய்துள்ளார்
அதேபோன்று குறுவட்ட வருவாய் ஆய்வாளரும் தலைமையிடத்து துணை வட்டாட்சியரும் இந்த விண்ணப்பத்தை நிராகரிப்பு செய்த நிலையில் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு வாரிசு சான்று வழங்கிவிட்டார்
இவர் வாரிசு சான்று வழங்கிய மறுநாளே 30.01.2025 அன்று மேற்படி பட்டா நிலத்தை போலி வாரிசுதாரர்கள் விற்பனை செய்து உள்ளார்கள்
அனாமத்து நிலத்தை போலி ஆவணங்கள் வழியாக கடம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து ஆவண எண் 165, ன் படி மணியாச்சியை சேர்ந்த நில புரோக்கர் முத்துராமலிங்கம் என்பவருக்கு விற்பனை செய்தது தொடர்பாக தெரிய வந்ததை அடுத்து வட்டாட்சியர் மீது இன்று 28 .01.205 திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இ .ஆ .ப . அவர்களிடம் நேரடியாக வட்டாட்சியரால் வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழ் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்த இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து புகார் மனுவை கொடுத்து உள்ளார்கள்
வட்டாட்சியர் போலி வாரிசு சான்றிதழ் வழங்கியது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது