ஷ்யாம் நீயூஸ்
18.04.2025
தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி 6நபர்கள் மீது வழக்கு பதிவு !
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சமத்துவ புரத்தைச் சார்ந்தவர் ஓட்டக்காரன் த/பெ தங்கராஜ் இவர் பாலிடெக்னியில் தொழிற்கல்வி படித்து அரசு வேலைக்காக காத்திருந்தார். இதனை அறிந்த அதே ஊரை சார்ந்த பத்திரகாளி க/ பெ முருகன் அவரை தொடர்பு கொண்டு தான் சென்னை தலைமை செயலகம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலக உதவி பணியாளர் வேலை வாங்கித் தருவதாக 2022ம் ஆண்டு ரூபாய் 5 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை நான்கு தவணையாக வங்கிக் கணக்கின் மூலமும், ஜிபே மூலமும் வாங்கி ஏமாற்றியுள்ளனர். ஓட்டக்காரனிடம் போலியாக பணி நியமண ஆணை தாயார் செய்து அதன் நகலை ஓடக்காரனிடம் பத்திரகாளி வழங்கியுள்ளார். மற்றும் ஒரிஜினல் ஆணை தலைமைச் செயலகத்தில் இருந்து விரைவில் வரும் என்று கூறி இந்த பண மோசடி வசூலில் பத்திரகாளி உட்பட குமரேசன் த/பெ பாண்டியன், விருதுநகரை சேர்ந்த தேவேந்திரன் த/பெ சுந்தரம் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தனக்கு ஒரிஜினல் பணி நியமன ஆணை வராததை கண்டு ஏமாந்த ஓட்டக்காரன் பணத்தை திருப்பித் தருமாறு பத்திரகாளியிடம் கேட்டுள்ளார் இதில் ஆத்திரமடைந்த பத்திரகாளி பணத்தை திருப்பி கொடுக்க மறுத்ததோடு பத்திரகாளி அவரது கணவர் முருகன் இவர்களது மகன்கள் சிவசங்கரபாபு, வைஇந்திரஅம்ரிஸ் ஆகியோர் ஓட்டக்காரனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஓட்டக்காரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இவரது புகார் குறித்து காவல்துறைனர் நடவடிக்கை எடுக்காததால் ஓட்டக்காரன் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார் . இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுபடி 6 நபர்கள் மீதும் தூத்துக்குடி குற்ற பிரிவு காவல் துறையினர் குற்ற எண் 16/2025 U/s 406,420,294(b)506(i)ipc வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.