ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.
ஷ்யாம் நியூஸ்
22.02.2025
ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.
தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல் தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்காமல் அவர்களை மிரட்டி வாபஸ் பெற வைப்பதும் அதிக விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வேலைகளை ஒதுக்குவதற்கான பணிகளை செய்வதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலக ஓவர்சீயர் முத்துராமனின் பணி உயர்வை நிறுத்தி வைத்து கயத்தாறு ஒன்றியத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 23 .10. 2024 அன்று தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இது போன்ற இன்னும் ஏராளமான ஊழல்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறுவதாகவும் அரசு நிதி பொதுமக்களுக்கு முறையாக செலவிடப்படவில்லை என்றும் ஊழல் அதிகாரிகள் பிடிப்பிடவேண்டும் என்றும் ஊழியர்கள் பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியள்ளது.