தொகுதி மறு சீரமைப்பு!குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்திய தென்னிந்தியாவிற்கு தண்டனையா? அமைச்சர் கீதா ஜீவன்
ஷ்யாம் நீயூஸ்
27.02.2025
தொகுதி மறு சீரமைப்பு!குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்திய தென்னிந்தியாவிற்கு தண்டனையா? அமைச்சர் கீதா ஜீவன்
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையரை செய்தால் நமது இந்தியாவில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 23.74% ல் இருந்து 18.97 %மாக குறைந்தது விடும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறி இருந்தார். இந்த கருத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக இன்று தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் .தமிழ்நாடு வளர்ச்சிக்கு பாதிக்க கூடியதாக இருக்கும்.
முதல்வர் முதலில் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்
தென் மாநிலங்களில் இருந்து இதற்கு ஆதரவு வந்துள்ளது.
பிற தலைவர்கள் எல்லாம் நமது முதல்வர் குரலுக்கு ஆதரவாக பேசி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்குத் தண்டனை; அதைச் செயல்படுத்தாத வட இந்திய மாநிலங்களுக்குப் பரிசு என்ற முரணான நிலை உருவாகியுள்ளது.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற அளவிலே அரசு தீவிரமாக செயல்படுத்தி அதன் மூலம் வளர்ச்சிப் பணிகளை தீட்டியது
தென் மாநிலத்திலேயே பிறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு தொகுதி குறையும் பாதிப்பு உள்ளது .
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு தென்மாநில எதிர்ப்பின் காரணமாக 1976ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கைவிட்டார்.
அந்த நடவடிக்கையை நெருக்கடிநிலை அமலில் இருந்த காலகட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஒத்திவைத்தார். இதற்காக அரசமைப்புச் சட்டம் 42இல் திருத்தம் செய்யப்பட்டது. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு இதைப் பார்த்துக்கொள்ளலாம் என்பது கணக்கு. அதற்குள் சீரான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சாத்தியமாகும் என்று நம்பப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
இந்திரா வழியில் வாஜ்பாய்: 2002இல் வாஜ்பாயும் இந்திரா காந்தியைப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. 2001இல் மக்கள்தொகைபடி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய முடிவெடுத்தால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் மாறாமல் இருந்தது. எனவே, 2003இல் வாஜ்பாய் அரசு அரசமைப்புச் சட்டக் கூறு 84இல் திருத்தம் செய்து, அந்த நடவடிக்கையை 2026 வரை ஒத்திவைத்ததுஎன்றும் இதனால்
தென் மாநிலம் எல்லாமே பாதிக்கும்
ஒன்றிய அரசின் ஒவ்வொரு முயற்சியும் நம்மை ஒடுக்க கூடிய அளவிலே உள்ளது.
பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, நிதி ஒதுக்கிடாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, புதிய கல்வித்துறையை பினபற்ற வேண்டும் என்று நிரூபிக்க வேண்டியதாக இருந்தாலும் சரி ஒடுக்கும் வகையிலேயே உள்ளது.தொடர்ந்து தமிழகத்தை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும், மகளிர் இட ஒதுக்கீடு விவாதத்தின் போதும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைக்கப்பட்ட பின்னர் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று உள்துறை அமைச்சர் பேசியுள்ளார்.
தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று நமது முதல்வர் குரல் கொடுக்கிறார்
மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையரை செய்தால் தமிழகத்தில் பிரதிநிதித்துவம் 23.74% இருந்து சதவீதத்திலிருந்து 18.97%மாக குறையும். தெலுங்கானா பிரச்சாரத்தின் போது கூட பிரதமர் மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் தென்னிந்தியாவில் 100 தொகுதிகள் குறையும் என்று பேசினார்.
தமிழகத்தின் நலன், எதிர்கால சந்ததியின் நலன் கருதி அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்து விடக்கூடாது. உள்துறை அமைச்சர் இது குறித்து தெளிவாக பேசவில்லை தெளிவுபடுத்த வேண்டும்
நாம் குரல் அற்றவர்களாக ஆகிவிடக்கூடாது .மணிப்பூரில் கலவரம் தலைவிரித்து ஆடியது இதை யாரும் கேட்கவில்லை. நமது உரிமையை நாம் காப்பாற்ற வேண்டும் .அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.