SHYAM NEWS
24.02.2025
விவசாயிகளுக்கு இன்று ! வங்கி கணக்கில் ரூ.2000.. ரூ.23,000 கோடியை விடுவிக்கும் பிரதமர் மோடி
மத்திய அரசின் 'பி.எம் கிசான் யோஜனா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இன்று (திங்கட்கிழமை) விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது
பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 24) விடுவிக்க உள்ளார்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மிக முக்கியமானது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளின் நிதி தேவைகளுக்கு உதவ மத்திய அரசால் நடத்தப்படும் திட்டம். இதில் தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. 2 ஹெக்டேர் வரையிலான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிஎம் கிஸான் திட்டம் கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது. அதாவது 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது. விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு தவணைத் தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பி.எம் கிசான் திட்டத்தின் 19வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். 18வது தவணை பிரதமர் மோடியால் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்டது. 18வது தவணைத் தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் தற்போது ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.