முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் பதவி விலக தயார்' - ஸெலன்ஸ்கி

 

SHYAM NEWS

24.02.2025

'யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் பதவி விலக தயார்' - ஸெலன்ஸ்கி




யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டாலோ அல்லது அமைதியை ஏற்படுத்தினாலோ தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

திங்கள் கிழமையன்று நடக்கவுள்ள ஐரோப்பிய தலைவர்கள் இடையிலான சந்திப்பு குறித்து முதலில் பேசிய ஸெலன்ஸ்கி, "யுக்ரேன் போர் தொடர்பாக இந்தச் சந்திப்பில் அடுத்த சில வாரங்களுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும். யுக்ரேனிய பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்கப்படும்," என்று கூறினார்.

யுக்ரேனுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என இரண்டுமே தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

யுக்ரேனில் நாளை நடைபெறும் சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் ஒரு செய்தியாளார் எழுப்பிய கேள்விக்கு, "சில வலுவான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக" தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு யுக்ரேன் போர் விவகாரத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்க வாய்ப்புள்ளது என தான் நம்புவதாகவும் ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள்

  • யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் அல்லது அமைதியைக் கொண்டுவர முடியும் என்றால், தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
  • அமெரிக்காவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான சாத்தியமான கனிம ஒப்பந்தம் குறித்துப் பேசிய அவர், ஒப்பந்த முன்மொழிவுகள் இதுவரை தாங்கள் விரும்பும் வகையில் இல்லை எனவும், பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில், தனது வளங்களைப் பகிர்ந்துகொள்ள யுக்ரேன் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • அவரை சர்வாதிகாரி என்று முத்திரை குத்தும் வகையிலான டிரம்பின் கருத்து குறித்துப் பேசியபோது, "நான் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஆனால், புதின் மீண்டும் படையெடுக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அதிபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
  • இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய பாதுகாப்பு உத்தரவாங்களைப் பற்றி ஆலோசிக்க ஐரோப்பிய தலைவர்கள் யுக்ரேனுக்கு வருகை தர உள்ளார்கள். இந்தச் சந்திப்பு, ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
  • யுக்ரேன், ரஷ்யா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையாக இருந்தாலும், அதில் யுக்ரேன் இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
  • டிரம்பின் 'சர்வாதிகாரி' விமர்சனம் குறித்து என்ன கூறினார்?

  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து யுக்ரேனுக்கு தேவைப்படும் உத்தரவாதங்கள் குறித்தும் அமைதிக்காக யுக்ரேனின் அதிபர் பதவியை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருக்கிறாரா என்பது குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த ஸெலன்ஸ்கி, "ஆம், யுக்ரேன் அமைதிக்காக அதிபர் நாற்காலியை விட்டு நான் விலக வேண்டுமென்று விரும்பினால், அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அதற்குப் பதிலாக யுக்ரேனை நேட்டோ உறுப்பினராக சேர்க்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

    ஜோ பைடன், டிரம்ப் என இருவரின் நிர்வாகத்தின் கீழும் கிடைக்கும் ஆதரவுக்குத் தான் கடமைப்பட்டுள்ளதாகக் கூறிய ஸெலன்ஸ்கி, அதிபர் டிரம்பிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டுமென்றும் தெரிவித்தார்.

    ரஷ்யாவுடனான போரின்போது யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிக்குப் பிரதிபலனாக, யுக்ரேனின் வளங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கை குறித்தும் அவர் தனது கருத்தைத் தெரிவித்தார்.

    முன்பு இந்தக் கோரிக்கையை நிராகரித்த யுக்ரேன் அதிபர் தற்போது, "அமெரிக்காவுடன் அதுகுறித்துப் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் வளங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு முதலில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா புதினை கட்டாயப்படுத்த வேண்டும்," என்று கூறினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை "தனது வேலையை மோசமாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சர்வாதிகாரி" என்று குறிப்பிட்டது குறித்துக் கேட்கப்பட்டபோது, "டொனால்ட் டிரம்பின் வார்த்தைகள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஒரு சர்வாதிகாரிக்குத்தான் அதைக் கேட்டு கோபம் வரும்," என்று புன்னகையுடன் யுக்ரேன் அதிபர் பதிலளித்தார்.

  • யுக்ரேனுக்கு ஐரோப்பிய தலைவர்களின் ஆதரவு

  • பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடக்கவுள்ள சந்திப்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று யுக்ரேன் அதிபர் தெரிவித்துள்ளார்.

    பாதுகாப்பு தொடர்பான தனது செலவினங்களை அதிகரிக்கவும், யுக்ரேனில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்ட உதவவும் ஐரோப்பிய தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டேர் லேயன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மருடன் இது தொடர்பாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

    இந்த வாரத் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் இருந்து பல தலைவர்களுடன் யுக்ரேன் தொடர்பான உச்சிமாநாட்டை பிரான்ஸ் அதிபர் நடத்தினார். அவரும் ஸ்டார்மரும் இந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் செல்கின்றனர்.

    யுக்ரேன் போரின் மூன்றாவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, "நீதியுடன் கூடிய நிலையான, விரிவான அமைதிக்கான அவசரத் தேவை இருப்பதாக" ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.

    மேலும், எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் "யுக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாட்டை" மதிக்க வேண்டும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

THANKS BBC TAMIL


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...