SHYAM NEWS
21-02-2025
கெட் அவுட் ஸ்டாலின்" எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை!
இன்று காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்விட் போடவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் அறிவித்திருந்தார். அதன்படி கெட் அவுட் ஸ்டாலின் என்று இன்று பதிவிட்டுள்ளார். மேலும், எங்களை விட அதிகமாக ட்விட் போட முடியுமா என்றும் அவர் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சரியாக காலை 6 மணிக்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, எல்லாவற்றிலும் ஊழல், சட்டம் ஒழுங்கை சீர்கெடுத்தது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகழிடமாக மாற்றியது, கடன்களை அதிகரிக்கச் செய்தது, பழமையான கல்வித் துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து அடிப்படைவாத அரசியலை பிளவு செய்தது, தொடர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தோல்வியடைந்த திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை விரைவில் மக்கள் வெளியேற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.