ஷ்யாம் நீயூஸ்
10.04.2025
தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யூ சி சங்கம் கூட்டம் நடைபெற்றது
10.04.2025 இன்று தூத்துக்குடி அக்குமென் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையிலும் மாணிக்கம் பொருளாளர் முன்னிலையிலும் டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யூ சி சங்கம் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன் கருத்துரை வழங்கினார்.ஏ ஐ டி யூ சி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் கடைகளில் ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், விற்பனையாளர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற வேண்டும், அனைத்து கடைகளுக்கும் சமமான மது பெட்டிகளை அனுப்பி வைக்க வேண்டும்,சில கடைகளில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட மேற்பார்வையாளர்க்கு பதிலாக நிரந்தர மேற்பார்வையாளர் பணி அமர்த்த வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விரைவில் மாவட்ட மேளாலரை சந்தித்து குறைதீர்க்கும் மணு கொடுக்க முடிவு செய்யப்பட்டது