ஷ்யாம் நியூஸ்
10.04.2025
தூத்துக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி ஊழல் !கட்டு காட்டாக சுருட்டும் அதிகாரிகள் !
தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய பணியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசின் திட்டங்களில் பயனாளிகளை தேர்ந்து எடுப்பதில் ஊழல் கிராமங்களில் சாலை அமைப்பதில் ஊழல் கிராமம் தோறும் குடி தண்ணீர் வழங்குவதில் ஊழல் .டெண்டரில் ஊழல் என ஊழல் மயமான தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அடாவடிக்கு கடிவாளம் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் வரி பணத்தை விரயம் செய்கின்றனர் .
கோரம்பள்ளம் பஞ்சயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அரசு குடியிருக்க வழங்கிய நிலத்தை விற்பனை செய்தவருக்கு மீண்டும் உரிய ஆவணம் இல்லாமல் ரூரல் ரிப்பேர் ஹவுஸ் திட்டத்தில் வேறொரு அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி க்கொள்ள ஆணை வழங்கி பணம் ஒதுக்கி உள்ளார் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் ,இது குறித்து நாராயனிடம் கேட்டபோது கோரம்பள்ளம் கிராமநிர்வாக அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று கொண்டதாகவும் ஆவணம் இருப்பதாகவும் அதை தான் உட்பட வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் ஓவர்சீர் பார்த்ததாகவும் தெரிவித்தார் ஆனால் இது குறித்து தூத்துக்குடி வருவாய்த்துறை தாசில்தார் முரளி ,கோரம்பள்ளம் கிராமம் 1 கிராமநிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோரிடம் கேட்டபோது குற்றம் சாட்டப்பட்ட பொறம்போக்கு நிலத்திற்கு எந்த தடை இல்லா சான்றும் வழங்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர். மற்றும் தற்போதும் அந்த இடம் அரசு புறம்போக்கு நிலமாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர் ,இதுபோன்று பொய் சொல்லியேயும் கேள்வி கேட்பவர்களை மிரட்டியும் ரௌடிசம் செய்து வருகின்றனர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் .செய்தி வெளியிட்டதர்க்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி ஐகோர்ட்ராஜா கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது ,
10 லட்சம் மதிப்புள்ள ஒர்க் ஆர்டெர்க்கு கடைசி பில் வரும் வரை கிட்டத்தட்ட 55% கமிஷன் பிரிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது .மீதி இருக்கும் பணத்தில் பணிகளை செய்து ஒப்பந்ததாரர் 10 முதல் 20% வருவாய் பார்க்க வேண்டியுள்ளது .மீதி இருக்கும் 25% பணத்தில் 2,5 லட்சத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பணிகளை செய்து முடிக்கின்றனர் அவ்வாறு நடைபெறும் கட்டிடங்கள் சாலைகள் மக்கள் குறிப்பிட்ட நாட்களுக்குக்கூட பயன்படுத்த முடியாமல் போகின்றன .டெண்டரில் குறைவான ஒப்பந்த புள்ளி பெற்றவருக்கு பணி வழங்காமல் அவர்களை மிரட்டி டெண்டரை கென்செல் செய்ய வைத்து அதிக ஒப்பந்த புள்ளி உள்ளவர்களுக்கு பணி வழங்க வழிவகை செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது .
வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடியை போன்று சாலையை காணோம் என்ற புலம்பலும் கேட்கிறது ,தூத்துக்குடி ஒன்றியத்தில் சாலை அமைக்காமல் பணத்தை ஆட்டைய போட்டுள்ளனர் அதிகாரிகள் என்ற பேச்சு தூத்துக்குடி ஒன்றியத்தில் வைரலாகி வருகிறது .
இது குறித்து ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்களிடம் கேட்டபோது பயனாளிகள் தேர்ந்து எடுப்பதில் தகுதி உள்ள ஏழை மக்களை தவிர்த்து.ஆவணம் இல்லாமல் இருப்பவர்களுக்கு கையூட்டு பெற்றுக்கொண்டும் அதிகாரிகளின் கைப்பாவைகள் கைகாட்டும் நபர்கள் பயனாளியாக சேர்க்கப்படுகின்றனர் .கேள்வி கேட்பவர்கள் பயனாளி பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்ற்றனர் தூத்துக்குடி ஒன்றியத்தில் பயனாளிகள் பட்டியல் மற்றும் கட்டிடம் சாலை பணிகளை மீண்டும் சரிபார்த்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார் .அரசு மாநில அளவிலான உரிமைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் பொது மக்களை நேரடியாக பாதிக்கும் உள்ளாட்சின் ஊழல் அரசுக்கு அவபெயரை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்று கருத்துக் இல்லை .
களை எடுக்குமா அரசு என்ற கேவியோடு காத்திருக்கின்ற்றனர் பொதுமக்கள் !