SHYAAM NEWS
19.07.2022
தூத்துக்குடியில் காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (23). இவர் 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் கோவில்பட்டி அனைைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.