ஷ்யாம் நீயூஸ்
06.07.20222
தூத்துக்குடி செல்வ விநாயகர் கோவில் விழா இன்னிசை கச்சேரி ஜீவன் ஜேக்கப் பங்கேற்பு
தூத்துக்குடி வாணியர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகபுரம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி செவ்வாய் கிழமை இரவு நடைபெற்ற 3ம்கால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீதாஜீவன் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜீவன்ஜேக்கப், இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில் இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இது போன்ற விழாக்களில் கலந்து கொள்வது ஓரு வகையான மகிழ்ச்சியை தருகிறது. செல்வ விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைத்து எல்லோரும் எல்லா செல்வங்களை கிடைக்க பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன் என்று பேசினார்.
வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணைச்செயலாளரும் அரசு வழக்கறிஞருமான சுபேந்திரன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். விழாவில் நிர்வாகிகள் காளி, ஆறுமுகம், முருகன், பாவநாசம். சந்தனமாரியப்பன், அருனாச்சலம், ஆவுடையப்பன், பரமசிவம், கண்ணன், கணேசன், கோவிந்தராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.