ஷ்யாம் நியூஸ்
28.07.2022
தூத்துக்குடியில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாமஸ் நகரை சேர்ந்தவர் ஜான்சன் (55). இவரது மகள் கிறிஸ்டி ஸ்டெப்னி வயது (22), மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்து முடித்துள்ளார். இவர் 22 ஆம் தேதி கடந்த வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதரன் பின்னர் திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஜான்சன் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.