ஷ்யாம் நியூஸ்
26.07.2022
எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை வெட்டிக் கொன்ற வழக்கில் பெண்ணின் தந்தை மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர்.
கடந்த வாரம் அவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர். அவர்கள் மாணிக்கராஜின் தாய் பேச்சியம்மாள் என்பவருடன் தங்கி இருந்தனர். நேற்று வழக்கம் போல பேச்சியம்மாள் 100 நாள் வேலைக்காக சென்றுவிட்டார். வீட்டில் மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா மட்டும் இருந்தனர். அப்போது அங்கு சென்ற முத்துக்குட்டி மகள் மற்றும் மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இது தொடர்பாக விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, சப்-இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன், காவலர் கணேசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது: எனது மகளை நல்ல நிலைக்கு கொண்டுவர நினைத்து கல்லூரியில் படிக்க வைத்தேன். மேலும் உயர்ந்த இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நினைத்தோம். ரேஷ்மா காதலிப்பதை தெரிந்த கொண்ட நான் அதனை கண்டித்தேன். கடந்த மாதம் 29-ந் தேதி தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதாக என்னிடம் ரேஷ்மா கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். பின்னர் அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாக எனக்கு போன் வந்தது. எனது எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று அவர்கள் வீட்டிற்கு சென்று திருமணம் தொடர்பாக பேசினேன். அப்போது வாக்குதாவம் முற்றவே ஆத்திரமடைந்த நான் அரிவாளால் மாணிக்கராஜை வெட்டினேன். அப்போது எனது மகள் ரேஷ்மா தடுக்க வந்தார். ஆத்திரத்தில் அவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டேன்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் கோவில்பட்டி உறவினர் வீட்டிற்கு செல்லமுயன்றேன். அப்போது போலீசார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கு முத்துக்குட்டியின் மனைவி மகாலெட்சுமியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும் கைது செய்தனர். கொலையாளிகளை 10 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.