தூத்துக்குடியில் ஆஷ்துரை நினைவு மண்டபத்தில் அவரது உருவ சிலை அமைத்து, விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
SHYAM NEWS
25.07.2022
தூத்துக்குடியில் ஆஷ்துரை நினைவு மண்டபத்தில் அவரது உருவ சிலை அமைத்து, விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆதி தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ் வேலவன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு : நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்துரை, ஆட்சி செய்த காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், சாதிய தீண்டாமை கொடுமைகளால் பாதிக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவர். ஒரு தாழ்த்தப்பட்ட பென் பிரசவ வலியால் துடித்தபோது அவரை தனது வண்டியில் ஏற்றி அக்ரகாரம் வழியாக மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்துள்ளர்.
இதை அறிந்த வாஞ்சிநாதன், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுள்ளார். வரலாற்றை அறியாத சிலர் ஆஷ் துரையின் நினைவு மண்டபத்தை புனரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மாமனிதர் ஆஷ்துரை நினைவு மண்டபத்தினை, விரிவாக்கம் செய்து அங்கு அவரது உருவச்சிலை மற்றும் வாழ்க்கை வரலாற்றை பொறிக்க வேண்டும். அவரின் நிணைவு நாளை அரசு விழாவாக கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.