ஷ்யாம் நியூஸ்
26.07.2022
தூத்துக்குடியில் பைக் எரித்த வழக்கில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபாண்டி மகன் செல்வகணேஷ் (22). இவர் நேற்று தனது மோட்டார் பைக்கை தனது வீட்டு வாசல் முன்பு நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி டி.எம்.பி காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாடசாமி (26), மாடசாமி மகன் சுப்புராஜ் (23) மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் மகன் சுப்புராஜ் (21) ஆகியோர் சேர்ந்து செல்வகணேசனின் பைக் டேங்க் கவரை அரிவாளால் வெட்டியும், பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வாகனத்தின் அடிப்பக்கத்தில் தீ பற்ற வைத்து எறித்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து செல்வகணேஷ் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்குபதிவு செய்து மாடசாமி, சுப்புராஜ் மற்றும் மற்றொரு சுப்புராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தார். இதில் மாடசாமி மீது ஏற்கனவே சிப்காட், தென்பாகம் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 3 வழக்குகளும், சுப்புராஜ் மீது மத்தியபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்