ஷ்யாம் நியூஸ்
27.07.2022
ஏரல் விஸ்வகர்மா பேரவை சார்பில் 6ம் ஆண்டு கல்வி பரிசளிப்புவிழா நடந்தது. ஏரல் அரசு மருத்துவமனை கண் பரிசோதகர் ஆசைத்தம்பி தலைமை வகித்து விஸ்வகர்மா சமுதாய ஐவர்ண அனுமன் கொடியேற்றினார். நகை மதிப்பீட்டாளர் அருணன், சாத்தான்குளம் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் தாமரைக்கண்ணன், விஸ்வகர்மா விக்கிரத்திற்கு ஆராதனை செய்தார். கவிஞர் ராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தென்கரை மகாராஜன், வானமாமலை, பெருமாள், கணேசன், குருஹரணி, சிவா மோகன் உட்பட பலர் பேசினர்.
விழாவில் மூக்காண்டி, இசைக்குமணி, அருணாசலம் ஆகியோருக்கு சமூக சேவகர் விருது மற்றும் தலா ரூ.ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. ஏரல் ராஜனின் கம்மாளரின் சாஸ்தா கோயில்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது. மேலும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும், பாராட்டு மடலும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் பிரமுகர் மந்திரக்குமார், யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன், கணேசன், அழகுமுருகன், ஏரல் ராஜன் மற்றும் விஸ்வகர்மா பேரவையினர் செய்திருந்தனர்.