ஷ்யாம் நியூஸ்
28.07.2022
தூத்துக்குடி அருகே குளத்தின் கரையில் மருத்துவ கழிவுகளை கொட்டி எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, தங்கம்மாள் புரத்திலிருந்து பேய்குளம் செல்லும் பாதையில் பொதுப்பணித் துறையின் திருவைக்குண்டம் வடிகால் பாசன குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மருத்துவக் கழிவை கொட்டி தீ வைத்து எரி்த்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோல் இன்று காலையிலும் மருத்துவக் கழிவைக் கொட்டி எரித்துள்ளனர்.
கையுறை போன்ற பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுகள் தண்ணீரில் கலந்தால் விவசாயிகள் மற்றும் குளத்தில் குளிக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக வடிகால் பாசன அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் எனவும், மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.