தூத்துக்குடி அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
ஷ்யாம் நீயூஸ்
05.07.202
தூத்துக்குடி அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடியில் நெய்தல் தூத்துக்குடி கலை விழா நடைபெறுகிறது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த தூத்துக்குடி அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் ஆகியோருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் .முதல்வர் எழுதிய வாழ்த்து மடலில்
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில், ஜூலை-7 தொடங்கி 10-ஆம் நாள் வரை “நெய்தல் - தூத்துக்குடி கலைவிழா" நடைபெறுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கலைகளையும், கலைஞர்களையும் எந்நாளும் போற்றி வரும் அரசுதான் கழக அரசு.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், துறைமுகம், உப்பு, எனப் பல சிறப்புகள் மிகுந்த, நெய்தல் நகரான தூத்துக்குடியில் இந்தக் கலைவிழா நடைபெறுவது சாலப் பொருத்தமானது.
கூத்து, கரகம், பொய்க்கால் குதிரையாட்டம், வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம்,பறையாட்டம், ஒயிலாட்டம் என மரபார்ந்த தமிழ்க்கலைகளை இத்தலைமுறை அறிந்துகொள்ள சிறந்த வாய்ப்பாக இந்தக் கலைத் திருவிழா அமையும்.இதற்கான முயற்சிகளை எடுத்து, சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கை கனிமொழி, மாண்புமிகு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரைப் பாராட்டி, இந்த விழா வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தனது வாழ்த்து குறிப்பில் தெரிவித்திருந்தார்