ஷ்யாம் நீயூஸ்
11.07.2022
பாலியல் தொழிலில் மும்பையை மிஞ்சும் தூத்துக்குடி
தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் தூத்துக்குடி முக்கிய பங்கு வகிக்கிறது ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் வேலைக்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் நகரின் பகுதிகளில் ஆங்காங்கே வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர் இவர்களை குறி வைத்து பாலியல் தொழில் ஈடுபடும் கும்பல் பொதுமக்கள் குடியிருப்பின் மையப்பகுதிகளில் பாலியல் தொழிலை வாடகை வீடு எடுத்து செய்து வருவதாக தகவல் வருகிறது. இந்த தகவலை அறிந்து களத்தில் இறங்கிய போது அனைத்து உண்மை என்று தெரிய வருகிறது முதலில் அனு வான பிரியா புரோக்கர் என்ற பெண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டாள் அவர் எந்தப் பகுதி எப்போது வர வேண்டும் அந்த பகுதிக்கு செல்லுங்கள் அங்கிருந்து ஒரு போன் வரும் அதன் பின் அவர்கள் அழைக்கும் இடத்திற்கு சென்று விட்டு வரலாம் என்றும் சொன்னது போல் அந்த நபர்களும் சரியாக தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது அவர்கள் வரச் சொல்லும் இடம் அனைத்தும் பொதுமக்கள் அமைதியாக குடியிருந்து வரும் குடியிருப்பு பகுதியாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர் .இந்த பாலியல் தொழிலை செய்வதற்காக திருநெல்வேலி தூத்துக்குடியில் புறப்பகுதியில் இருந்து வறுமையில் வாழும் பெண்களை ஆசை வார்த்தைக் காட்டி இத்தொழில் ஈடுபட செய்வதாக தெரிகிறது ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 முதல் 6000 வரை பேரம் பேசப்படுகிறது தூத்துக்குடி சண்முகபுரம், பி என் டி காலனி ரயில் தண்டவாளம் அருகிலும் ஆசிரியர் காலனி சாக்கடை பாலம் அருகிலும் மற்றும் ரகசியமான பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது லொகோண்டோ எனும் வலைதள மூலம் வாடிக்கையாளர்களை கனகச்சிதமாக ஆர்கனைஸ் பண்ணித் தருகிறார் தூத்துக்குடி பாலியல் தொழில் தலைவி அனு வான பிரியா என்றும் ஆண்டு கணக்கில் நடக்கும் இந்த பாலியல் தொழில் காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையினருக்கு தெரியாமல் நடக்கிறதா ? இல்லை கண்டும் காணாமல் இருக்கின்றனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எத்தனையோ ஏழ்மையில் படித்து ஒழுக்கமாக இருக்கும் குடும்பங்கள் குடியிருந்து வரும் குடியிருப்பு நடுவில் பணத்தாசை காட்டி இது போன்ற கருப்பாடுகள் செய்யும் செயலால் ஏழ்மையில் உள்ள பெண்கள் திசை மாறி செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் டிஜிட்டல் முறையில் தொடர்புகளை வைத்துக் கொள்வதால் காவல்துறையிடம் எளிதில் சிக்குவதில்லை என்றும் கூறப்படுகிறது எனவே பெண்கள் பாதுகாப்பு ,விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.