ஷ்யாம் நீயூஸ்
19.07.2022
தூத்துக்குடியில் சாலைப்பணி விரிவாக்கம் அமைக்கும் பணி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிகுட்பட்ட எட்டையாபுரம் சாலை இசக்கியம்மன் கோவில் அருகில் கால்வாய் அமைக்கும் பணி திருச்செந்தூர் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்து சிவந்தாகுளம் இரண்டாவது தெரு பகுதியில் சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆணையர் சாருஸ்ரீ, பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலர் ராமகிருஷ்ணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், பிரதிநிதி பிரபாகர், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, வன்னிராஜ், வட்டபிரதிநிதிகள் பாஸ்கர், ரஜினிமுருகன், மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.