மாப்பிள்ளையூரணி காந்திநகர் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி இன்னிசை கச்சேரி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
ஷ்யாம் நீயூஸ்
07.07.2022
மாப்பிள்ளையூரணி காந்திநகர் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி இன்னிசை கச்சேரி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர், வெற்றிநகரில் அனைத்து சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோவில் வருஷாபிஷேகம், மற்றும் கொடைவிழாவையொட்டி நடைn;பற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் தெய்வங்கள் அனைவருக்கும் துணை நிற்கும் இந்த பகுதி மட்டுமின்றி மாப்பிள்ளையூரணி பகுதி முழுவதும் வளர்ச்சியடைவதற்கும் என்னாலும் உங்களோடு இருந்து கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உழைப்பேன் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
விழாவில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, திமுக நிர்வாகிகள் மாரியப்பன், வேல்ராஜ், கணேசன், சுதாகர், கோவில் தலைவர் என்.மாரிமுத்து, துணைத்தலைவர் எஸ்.மாரிமுத்து, செயலாளர்கள் ஜெயகணேஷ், பாரதிராஜா, ரமேஷ், பொருளாளர் சாந்தகுமார், இளைஞர் அணி பாலமுருகன், முருகேசன், மாரிச்செல்வம், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.