ஷ்யாம் நியூஸ்
27.07.2022
தூத்துக்குடி முத்தையாபுரம் கணேஷ் நகர் செல்வகுமார். இவரது மகள் ஜெபா மெர்லின் ஜாக்கோஸ் (19). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்பு வீடு திரும்ப வில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது குறித்து அவரது தந்தை செல்வக்குமார் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சீலன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.