ஷ்யாம் நீயூஸ்
25.07.2022
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் அமாவாசையன்று "10,008 கிலோ பச்சை மிளகாய்" மஹா யாகம் நடக்கிறது.
நோய்கள் இன்றி வாழவும், கடன் தொல்லைகள் எதுவுமின்றி பணம் கொழித்து செல்வ வளம் பெருகிடவும் வேண்டி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 28-ம் தேதி ஆடி ஸர்வ மஹாளய அமாவாசையன்று "10,008 கிலோ பச்சை மிளகாய்" மஹா யாகம் நடக்கிறது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான மிகப்பிரமாண்டமான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹாகாலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.
ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஸர்வ மஹாளய அமாவாசை நாட்களான தை, ஆடி, புரட்டாசி அமாவாசை நாட்களில் ''உலக மக்கள் நலமாக வாழவேண்டியும், பருவமழை தவறாமல் பெய்து பசுமைவளம் செழிக்கவேண்டியும், பக்தர்களின் வாழ்வில் செல்வவளம் கொழிக்கவேண்டியும் மிளகாய் வற்றல், பாகற்காய், பச்சை மிளகாய், எலுமிச்சைப்பழம் கொண்டு "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, வரும் 28ம் தேதி(வியாழக்கிழமை) "ஆடி மாத ஸர்வ மஹாளய அமாவாசை"யை முன்னிட்டு "10,008 கிலோ பச்சை மிளகாய்" சிறப்பு மஹா யாகம் நடைபெறுகிறது.
பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும், உலகில் கொரோனா போன்ற கொடிய நோய்கள் இல்லாமல் ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் சிறப்பாக நடைபெறவும் வேண்டி "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மஹாயாக வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகிறது.
அன்று காலை 8.45 மணிக்கு சிறப்பு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலாகலமாக துவங்குகிறது.
தொடர்ந்து காலை 10.30மணிக்கு *"10,008 கிலோ பச்சை மிளகாய்"* கொண்டு சிறப்பு மஹா யாகம் துவங்கி நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து மதியம் 12மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், மதியம் 1மணிக்கு மஹா தீபாரதனையும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நிறைவுறுதலும், மாலை 5 மணிக்கு மஹா தீபாராதனையும் நடக்கிறது.
மஹா யாக வழிபாடுகளை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ''கைமேல் பலன் தரும் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மஹா யந்திர பாராயணம்'' நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது.
பணம் கொழித்து, செல்வவளத்தை அள்ளித்தந்திடுவதுமான "10,008 கிலோ மச்சை மிளகாய்" மஹா யாகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர்களை *94434 04832, 63698 74760, 70108 87829, 99432 03700* என்ற செல்போன் எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்தும் பயன்பெறலாம். முன்பதிவு செய்து பங்கேற்றிடும் பக்தர்களுக்கு கடன்தொல்லைகள் யாவும் நீங்கி, இல்லத்தில் செல்வங்கள் பெருகும் ''மஹா யந்திரம்'' வழங்கப்படும்.
பக்தர்கள் அனைவரும் சிறப்பு மஹா யாக வழிபாட்டில் பங்கேற்று சிறப்பிக்குமாறு ஸ்ரீசித்தர் பீடத்தின்சுவாமிகள் "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார். சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.