தூத்துக்குடியில் இனி செய்தித்தாள்களில் எண்ணெய்ப்பலகாரங்கள் விநியோகிக்க தடை. ஆட்சியர் செந்தில்ராஜ்( இ ஆ ப) அதிரடி உத்தரவு .
SHYAM NEWS
19.7.2022
தூத்துக்குடியில் இனி செய்தித்தாள்களில் எண்ணெய்ப்பலகாரங்கள் விநியோகிக்க தடை. ஆட்சியர் செந்தில்ராஜ்( இ ஆ ப) அதிரடி உத்தரவு .
தூத்துக்குடி: டீக்கடைகளில் பஜ்ஜி, வடை போன்ற பலகாரங்களை செய்தித் தாள்கள் போன்ற அச்சிடப்பட்ட தாள்களில் வைத்து வழங்குவதற்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
செய்தித்தாள்களில் அச்சிடப்படும் மையில் வேதிப்பொருட்கள் கலந்துள்ளதால் செய்தித்தாள்களில் எண்ணெய் உணவுப்பொருள்களை மடித்து பொதுமக்கள்களுக்கு கடைக்காரர்கள் விநியோகம் செய்வதால் பல நோய்களுக்கு மக்கள் இன்னலாகின்றனர்.பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.