தூத்துக்குடி பனிமயமாதா 440வது பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அமைச்சர், மேயர், கலெக்டர், எஸ்.பி, பங்கேற்பு
ஷ்யாம் நீயூஸ்
26.07.2022
தூத்துக்குடி பனிமயமாதா 440வது பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அமைச்சர், மேயர், கலெக்டர், எஸ்.பி, பங்கேற்பு
இதில் தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை பங்கு தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் கொடிப்பவனி நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை காலை 4.30 மணிக்கு ஜெபமாலை நடைபெற்று 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45க்கு 2ம் திருப்பலியும், அதனை தொடர்ந்து 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், கொடியேற்றமும் பிஷப் ஸ்டீபன் தலைமையில் காலை 9.30 மணிக்கு 3ம் திருப்பலி நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு பங்கு தந்தை ரூபஸ் பெர்ணான்டோ தலைமையில் பனிமயமாதாவுக்கு பொன்மகுடத்தை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 3 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணி, பகல் 12 மணி, மாலை 3 மணி, இரவு 7.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் விழாநாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் ஆயர்கள், பங்கு தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக ஆயர்கள் ஸ்டீபன், இவோன்அம்புரோஸ், அந்தோணிசாமி, முதன்மை குரு பன்னீர் செல்வம் மற்றும் பங்கு தந்தையர்கள், உலகமெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், இறைமக்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆகஸ்ட் 4ம்தேதியன்று இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திற்குள் பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. ஆக.5ம் தேதி நடைபெறும் சிகர நிகழ்ச்சியான பெருவிழாவில் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது.
பனிமயமாதா ஆலயத்திருவிழா மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநில மீணவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலதலைவர்கள் நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, கவுன்சிலர்கள் பவாணி மார்ஷல், மெட்டில்டா, ரிக்டா, எடின்டா, வட்டச்செயலாளர்கள் டென்சிங், அன்டோ, ரவிசந்திரன், வன்னிராஜ், மற்றும் பாஸ்கர், கருணா, அல்பட், மணி, பிரபாகர், ஜோஸ்பர், மகளிர் அணி பெல்லா, பரதர் நலசங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர், செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, பொதுச்செயலாளர் இன்னாசி, குரூஸ்பர்னாந்து நற்பணிமன்ற அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் எட்வின்பாண்டியன், தலைவர் ஹெர்மன்கில்ட், முன்னாள் கவுன்சிலர்கள் அருள், ஷர்மிளா அருள்தாஸ், செந்தில்குமார், மதிமுக மாநகர இளைஞர் அணி செயலாளர் மணவை ரூஸ்வெல்ட், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், மற்றும் உள்பட லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 4 ஏடிஎஸ்பிகள், ஒரு ஏஎஸ்பி மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயவளாகம் அருகே தற்காலிகமாக இரு கண்காணிப்பு கோபுரங்கள் போலீசார் அமைத்துள்ளனர்.
ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள் பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குதந்தை பால்ரோமன் மற்றும் அருட்சகோதரிகள், இயேசு சபையினர், லசால் அருட் சகோதரர்கள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.