ஷ்யாம் நியூஸ்
22.07.2022
தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
தூத்துக்குடி கோமஸ் புரத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் உலகுமணி (50), இவர் நேற்று தூத்துக்குடி துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சீலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .