ஷ்யாம் நியூஸ்
27.07.2022
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கல்லூரி விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி விழா நடைபெற்றது. மாணவர் சங்கத் துணைத் தலைவர் சா.ஆதித்தன், சங்கத்தின் ஆண்டறிக்கையை (2021-22) வாசித்தார். துணைவேந்தர் கோ.சுகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மீன்வள மேம்பாட்டு ஆணையர் (ஓய்வு), பி.பால்பாண்டியன், கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரி விழாவை முன்னிட்டு வினா-விடை, முக சித்திரம் வரைதல், நெருப்பில்லாமல் சமைத்தல், காய்கனி செதுக்குதல், ஓவியம் வரைதல், மெஹந்தி, சிகை அலங்காரம் மற்றும் தமிழ் கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மேலும் பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், குழு நடனம், மிஸ்டர் மற்றும் மிஸ் மீன்வளம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இதில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முதலிடத்தை பிடித்து வெற்றி கோப்பையையும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் அறிவியல் கழக செயலாளர் ஜெயபிரிதாவரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக மாணவ பொது செயலாளர் செல்வன் மணிகண்டன் நன்றியுரையாற்றினார். விழாவில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் திரளாக பங்கு கொண்டனர்.