ஷ்யாம் நியூஸ்
29.07.2022
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு தமிழக அரசின் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு இழப்பீட்டு தொகையாக (Victim Compensation Fund) தமிழக அரசு ரூ.8,17,000 வழங்கியுள்ளது. இந்த நிவாரணத் தொகையை வங்கி வரைவோலையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் .
இதில் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவிக்குமார் என்பவரை எதிரிகள் கொலை செய்த வழக்கு, புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதி மகன் மோகன் என்பவரை எதிரிகள் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கு உட்பட 14 குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.