தூத்துக்குடியில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர். தூத்துக்குடி இந்தியா சுதந்திரம்
ஷ்யாம் நீயூஸ்
16.07.2022
தூத்துக்குடியில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு அமுத பெருவிழாவை முன்னிட்டு கொரோனா தொற்று தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக செலுத்தியவர்களுக்கு மூன்றாம் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்டேட்பேங்க் காலணியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதாரா மையத்தில் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியேர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், நகர் நல அலுவலர் அருண்குமார், வடக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், கற்பககனி சேகர், மாவட்ட மகளிர்அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, வட்டச்செயலாளர்கள் சந்தனமாரி, சதீஷ்குமார், வட்டப்பிரதிநிதிகள் ரமேஷ், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று மாநகராட்சி பகுதிகளில் 7 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.