ஷ்யாம் நியூஸ்
22.07.2022
கோவில்பட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடங்க இருப்பதை முன்னிட்டு பள்ளி மாணவா், மாணவிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கோவில்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார அளவிலான பள்ளி மாணவா், மாணவிகளுக்கான போட்டி நடைபெற்றது.
இதில் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தனித்தனியே 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை நகர் மன்ற 22-வது வார்டு உறுப்பினர் லூர்துமேரி தொடக்கி வைத்தார். அப்போது போட்டியின் பொறுப்பாளர் உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன், தொழிலதிபர் அமலி பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.