ஷ்யாம் நீயூஸ்
14.07.2022
மாப்பிள்ளையூரணி டேவிஸ்புரத்தில் தலைவர் சரவணக்குமார் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி டேவிஸ்புரம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி தருமாறு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 80 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பழமையான விநாயகர் கோவில் இருந்து வருகிறது. அதை நிர்வாகம் செய்யும் நிர்வாகிகளிடம் பேசி அதன் ஓருபகுதியில் உள்ள காலி மணையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் 18 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீhத்தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து அதற்கான பூமிபூஜை செய்து புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஜேசிபி மூலம் அப்பணியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜீனத்பீவி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, கிளைச்செயலாளர் குமார், நிர்வாகிகள் மலையரசன், சந்தனகுமார், சுப்பிரமணியன், பொன்ராஜ், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.