வாரிசு அரசியலை பற்றி பேசும் மோடிக்கு வாரிசு இல்லை என்றால் நாங்களா பொறுப்பு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் கேள்வி
ஷ்யாம் நீயூஸ்
18.07.2022
வாரிசு அரசியலை பற்றி பேசும் மோடிக்கு வாரிசு இல்லை என்றால் நாங்களா பொறுப்பு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் கேள்வி
தூத்துக்குடி காமராஜர் 120வது பிறந்தநாளை யொட்டி சக்தி விநாயகபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் சேகர் தலைமை வகித்தார். சீனிவாசன், மகேந்திரன், சின்னத்துரை, பாக்கியராஜ், மெர்லின், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் கற்பககனி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் தையல் மிஷின் இஸ்திரி பெட்டி அரிசி சேலை நோட்புக் வழங்கினார்கள்.
மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் பேசுகையில் எளிமையின் சிகராமாக வாழ்ந்த காமராஜருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் இந்தியா முழுவதும் மகிழ்ச்சி கொள்கிறது. காரணம் தன்னலம் கருதாமல் மக்கள் நலம் தான் முக்கியம் என்று வாழ்ந்தவர். ஓருநாள் காரில் பயணம் செய்தபோது விருதுநகர் இரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்த போது அந்த வழியாக மாடு மேய்த்து கொண்டிருந்து சிறுவனை பள்ளிக்கு செல்லவில்லையா என்று கேட்ட போது அங்கு சென்றால் எனக்கு சாப்பாடு உங்கப்பாவா தருவார் என்று கேட்டான். சாப்பாடு கொடுத்தால் பள்ளிக்கு படிக்க வருவாயா? என்று கேட்ட போது வருவேன் என்றான். காரில் சென்ற போதே மதிய உணவு திட்டத்தை அமுல் படுத்துவது குறித்து சிந்தித்து மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி பள்ளி இல்லாத கிராமம் இருக்க கூடாது. என்று தமிழகம் முழுவதும் கல்வி நிலையத்தை அமைத்து படிப்பறிவை உருவாக்கியவர் கர்மவீரர் காமராஜர்.
இப்படி பட்ட தலைவர்கள் வாழ்ந்த இந்தியாவில் நானும் உத்தமன் தான் என்று சொல்லிக்கொண்டு பிரதமர் மோடி இந்திய மக்களை ஏமாற்றி வருகிறார். தொழிலதிபர்கள் வாங்கிய கடனை ஆண்டு தோறும் தள்ளுபடி செய்து ஏழை எளிய மக்களை வஞ்சிக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு பல கோடி செலவு செய்துள்ளார்கள். மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கிறார். காவித்துண்டை போட்டுக் கொண்டு கடவுளை நான் தான் காப்பாற்றுகிறேன் என்று பேசிக் கொள்கிறார். இப்படி வேஷம் போடுவர்கள் பின் சென்றால் நாடு சுடுகாடாக மாறிவிடும். மதசார்பற்ற நாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்வது நியாயம் தானா பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.
முஸ்ஸீம்களுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு மசூதியை இடிக்கிறார். சிறுபான்மை மக்களை பாதுகாக்கிறேன் என்று கூறிக்கொண்டு பல்வேறு வகையிலும் அவர்களையும் நசுக்குகிறார். இப்படி பட்ட மத்திய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப ஓட்டு மொத்தமாக 2024ல் நடைபெறும் தேர்தலில் முடிவு கட்டுவதற்கு இளம் தலைவர் ராகுல்காந்தியை முன்னிலை படுத்துகிறோம். இதில் வாரிசு பற்றி மோடி பேசுகிறார். உங்களுக்கு வாரிசு இல்லை என்றால் அதற்கு நாங்களா பொறுப்பு? நேரு காலம் தொட்டு இந்திராகாந்தி ராஜீவ்காந்தி, என இந்தியாவிற்காக இரத்தம் சிந்தி வாழ்ந்த கட்சி காங்கிரஸ் என்பதை மறந்துவிடாதீர்கள் குறுக்கு வழியில் செய்யும் அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. அரிசிக்கு வரி விதித்து உணவு பொருட்களிலும் கை வைத்த இவர்களது ஆட்சி இனியும் நீடிக்க கூடாது. வரும் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும். என்று பேசினார்.
விழாவில் ஐஎன்டியுசி தலைவர் ராஜ், கவுன்சிலர் சந்திரபோஸ், மண்டலத்தலைவர் ஐசன்சில்வா, சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, அருள், மாவட்ட நிர்வாகிகள் கோபால், குமாரமுருகேசன், மணி, மிக்கேல், சின்னகாளை, நிர்மல் கிறிஸ்டோபர், உள்பட பலர் கலந்து கொண்டனர். சேவா தள மாநகர் மாவட்ட தலைவர் ராஜா நன்றியுரையாற்றினார்.