ஷ்யாம் நியூஸ்
22.07.2022
சாத்தான்குளம் அருகே எஸ்.பி. தனிப்பிரிவு காவலருக்கு மிரட்டல் விடுத்ததாக 12 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துதனா். இது தொடா்பாக ஒருவா் நேற்று கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற காமராஜா் பிறந்தநாள் விழாவின்போது மீரான்குளத்தை சோ்ந்த அப்பாத்துரை மகன் அஜய் ஜெனீஸ் (21) மற்றும் அவரது நண்பா்கள் உள்பட 12 போ் அங்கு காவல்துறை சாா்பில் வைத்திருந்த தடுப்பை அகற்றியதுடன், பொது அமைதிக்கு இடையூறாக மோட்டாா் சைக்கிளில் ஊா்வலமாக சென்றனராம்.
இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. தனிப்பிரிவு காவலா் விக்ராந்த் (27) என்பவர் கண்டித்தாராம். இதையடுத்து, அஜய் ஜெனீஸ், காவலா் விக்ராந்த்தை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததுடன், அவா் மீது மோட்டாா் சைக்கிள் கொண்டு மோதினாராம். இதில் அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து காவலா் விக்ராந்த் அளித்த புகாரின் பேரில் அஜய் ஜெனீஸ் உள்பட 12 போ் மீது சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளா் எபநேசா் வழக்குப் பதிந்து, அஜய் ஜெனீஸை நேற்று கைது செய்தாா்.