முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்று உருவாக்குவது தான் எங்களுடைய இலக்கு மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை

ஷ்யாம் நீயூஸ்

24.07.2022

 தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்று உருவாக்குவது தான் எங்களுடைய இலக்கு மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா ஆலயம் மிகவும் பழமையானது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படும். அதே போல் வரும் 26ம் தேதி 440வது ஆண்டை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற பத்தாவது நாளான ஆகஸ்ட் 5ம் தேதி திருவிழா நடைபெறுகிறது.


     திருவிழாவை காண வெளிநாடு, வெளி மாவட்ட, மாநிலங்களை தாண்டியும் அங்கிருந்து மக்கள் வந்து கலந்து கொள்வர். ஏராளமான மக்கள் கூடும் இடம் என்பதால் அதனை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மாநகராட்சி நிர்வாகத்திடம் இருக்கிறது. எனவே இந்த முறை வரும் பக்தர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதற்கும், சுத்தமாக வைத்திருக்கவும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். தேவையான அத்துனை பணிகளை நேரடியாக பார்வையிட்டு முடுக்கி விட்டு வருகிறார். அதன் மூலம் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு சுத்தமாகி வருகிறது.


      தெற்கு கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் கூட்டு துப்புரவு பணியினை மேற்கொள்ள 130 தூய்மை பணியாளர்கள், 30 வாகனங்கள், முழுமையாக ஈடுபடுவதை மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


    நிகழச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், மாதா கோவில் உதவி பங்குதந்தை பால்ரோமன், கவுன்சிலர் ரிக்டா, மாநகர திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, சுகாதார அலுவலர் ராஜசேகர், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் பொதுமக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று தமிழக முதலமைச்சர் தளபதியாளர் வழிகாட்டுதலின் படி பணியாற்றி வருகிறோம். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கவனம் செலுத்துவது மாநகராட்சியின் கடமை என்பதை உணர்ந்து செயல்படும் நிலையில் பனிமயமாதா பேராலய திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவானது ஜாதி மதம் மொழி அனைத்தையும் கடந்து அனைவரும் வந்து செல்லும் ஒரு மிகப்பெரிய திருவிழா அப்பகுதி மாநகராட்சி கிழக்கு மண்டலம் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முழுமையான தூய்மையான பகுதியாக இருப்பதற்கு கூட்டு தூய்மை பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமை தோறும் தூய்மை பணிகள் எல்லா பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த பகுதிக்குட்பட்ட இரயில்வே ஸ்டேஷன் ரோடு, வஉசி மார்க்கெட் அருகில் பல மாதங்களாக மாநகராட்சி சார்பில் செயல்பட்ட கழிவறை மற்றும் குளியலறை செயல்படாமல் சில குறைபாடுகளால் முடப்பட்டிருந்தது. அதை தற்போது சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி முழுவதும் பொது கழிவறை குளியலறை அனைவருக்கும் இலவசமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து வருகிறது. பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் எந்த நேரமும் என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி எல்லா வகையிலும் நல்ல முறையில் பணியாற்றி சிறந்த மாநகராட்சியாக உருவாக்குவதுதான் எங்களது இலக்கு என்று கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...