ஷ்யாம் நீயூஸ்
04.07.2022
தூத்துக்குடி செயிண்ட் ஆன்ஸ் பள்ளி மாணவி தேசிய டேக்வாண்டோ போட்டியில் சாதனை
தூத்துக்குடி மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இந்தியா டேக்வாண்டோ சார்பில் நடைபெற்ற நேஷனல் ரேங்கில் டேக்வாண்டோ காம்படிசன் போட்டியில் தூத்துக்குடி செயிண்ட் ஆன்ஸ் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி கிராஸ்லின் செல்வி கேடட் மாணவிகளுக்கான 29 கிகி எடை பிரிவில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்ந்துள்ளார். வெற்றி பெற்ற மாணவியையும் டேக்வாண்டோ பயிற்சியாளர் இராமலிங்கபாரதி, பள்ளி தாளாளர் சுசில்,பள்ளி முதல்வர் வில்பா, துணை முதல்வர் ஆகியோரை ஆசிரிய பெருமக்கள் வாழ்த்தி பாராட்டினார்கள்.